அருணகிரிநாதர் முருகப்பெருமானை போற்றி பல பாடல்களை பாடியுள்ளார். அப்பாடல்களின் தொகுப்பே திருப்புகழ். இந்த வீடியோ "நினது திருவடி சத்தி" பாடலின் விளக்கவுரை ஆகும்.
#######################
Saint Arunagirinadhar wrote hymns on Lord Muruga. Collectively the songs are called as Thiruppugazh. This video has explanation for the song "Ninadhu-thiru-vadi".
#######################
நினது திருவடி சத்திம யிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே
தெனன தெனதென தெத்தென னப்பல
சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
நிரைய அரவநி றைத்தக ளத்திடை
திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே
எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்
துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்றுந டித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே
#######################
Note: Song lyrics & audio recording for the songs can be downloaded from
www.chinmayasar...
#######################
திருப்புகழ் சொற்பொழிவு, ப்ரதி செவ்வாய் மற்றும் வியாழன், மாலை 6.45 - 7.15.
மேலும் விவரங்களுக்கு, 95660 56993.
#######################
Негізгі бет Thiruppugazh Session 10 Ninadhu-thiru-vadi || திருப்புகழ் 10 நினது திருவடி சத்தி
Пікірлер: 7