#திருப்புகழ் #விநாயகர் #அருணகிரிநாதர் #Thiruppugazh #Thirumurai #Arunagirinathar
பக்கரைவி (விநாயகர் துதி)
தொகுப்பு: திருப்புகழ்
அருளியவர்: அருணகிரிநாதர்
பாடியவர்: சம்பந்த குருக்கள்
......... சந்தம் .........
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன - தனதான
......... பாடல் .........
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர - கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை - வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப - னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை - மறவேனே
இக்கவரை நற்கனிகள் சக்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை - இளநீர்வண்டு
எச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை - தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கநச மர்த்தனெனும் - அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய - பெருமாளே.
-
திருப்புகழ்
Playlist from our channel:
• திருப்புகழ்
நன்றி!!!
Негізгі бет திருப்புகழ் - விநாயகர் துதி | பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை | அருணகிரிநாதர்
Пікірлер