சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம் வழித்தடம் 4ன் தற்போதைய நிலவரம்
Chennai metro phase 2 present update
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம் 118.9கி.மீ தூரத்தில் ரூ.61,843 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் வழித்தடம் 3 மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே 45.8கி.மீ தூரத்திலும், வழித்தடம் 4 கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே 26.1 கி.மீ தூரத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 47கி.மீ தூரத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை விரைவாக முடிப்பதற்காக ஒரு வழிதடத்திற்கு 3 ஒப்பந்ததாரர்கள் என்ற வீதத்தில் இந்த திட்டத்தின் கட்டுமான ஒப்பந்தம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இந்தியாவின் டெல்லி மெட்ரோவிற்கு அடுத்ததாக ஒட்டுனரில்லா மெட்ரோ தொடர்வண்டிகள் இயக்கப்படவிருக்கிறது. இந்த வழித்தடம் 4ல் package 1ல் பூந்தமல்லி பைபாஸ் - சென்னை பைபாஸ் கிராஸிங் இடையே மெட்ரோ வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலையங்களை அமைப்பதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை HCC - KEC என்ற கூட்டு ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.1147 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது. இதே வழித்தடத்தில் உள்ள package 2ல் போரூர் சந்திப்பு - கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் இடையே மெட்ரோ வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலையங்களை அமைப்பதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை L & T நிறுவனத்திற்கு ரூ.1173 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது. பவர் ஹவுஸ் உயர்மட்ட பாதையில் இருந்து சுரங்கப்பாதை அணுகுவதற்கான பாதையில் இருந்து கலங்கரை விளக்கம் இடையே மெட்ரோ வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலையங்களை அமைப்பதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை ITD cementation India Ltd நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. பூந்தமல்லி மெட்ரோ பணிமனை அமைப்பதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை உக்ரேனை தலைமை இடமாக கொண்ட Altis Holding Corporation & Varandhra Construction Ltd என்ற கூட்டு ஒப்பந்த நிறுவனம் ரூ.187.48 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது. இந்த வழித்தடம் 4ல் சீர்தர இருப்புப்பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை IRCON International Ltd என்ற நிறுவனம் 337.76 கோடி மதிப்பில் வென்றுள்ளது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ தொடர்வண்டி கொள்முதலுக்கான ஒப்பந்தத்தை Alstom Transport India Ltd நிறுவனம் ரூ.942.92 கோடி மதிப்பில் வென்றுள்ளது. இந்த வழித்தடம் 4 2025ல் மக்களின் பயன்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தில் ஆழமற்ற மற்றும் நீளமான சுரங்க மெட்ரோ நிலையம் கலங்கரை விளக்கம் பகுதியில் அமைக்கப்படும்.
Негізгі бет Ойын-сауық Chennai metro phase 2 corridor 4 update | சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டம் வழித்தடம் 4ன் கள நிலவரம் 🚇🚇
Пікірлер: 70