Singer: “Padmashri” Dr. Sirkazhi S Govindarajan
Music: "Kalaimamani" T R Papa
Lyricist - Sakthi T Bhuvaneshwari
Video Script - Sakthi Sridevi Velumyl
Video Editing - Sakthi Ramya
Thumbnail - Sakthi Surendar
பல்லவி
சக்திக்கும் சக்தி இவள்
ஆதிபராசக்தி இவள்
எத்திக்கும் எதிரொலிக்கும்
எங்கள் பராசக்தி இவள்
அனுபல்லவி
பக்திக்கு உருகிடுவாள்
பராசக்தி அன்னைஇவள்
தித்திக்கும் இவள் பெயரே
சிந்தையிலே நினைத்திட்டால்.
சரணம்-1
காந்தமென கவர்ந்திடுதே
கன்னி உந்தன் பேரருளே
சாந்தமென சிரித்திடுதே
சக்தி உந்தன் முக அழகே
மாந்தர் எமை மயக்கிடுதே
மாதேவி உன் வடிவே
சேர்த்தெம்மை ஈர்த்திடுதே
ஸ்ரீதேவி உன் அருளே
சரணம் - 2
அழுத கண்ணீர் துடைத்திடவே
அரவணைக்க அமர்ந்தவளே
தொழுதகை தூக்கிடவே
துணை எனவே நின்றவளே
அடுத்து வரும் வினையாவும்
அண்டாமல் காப்பவளே
குடும்ப நலம் காத்திடவே
குங்குமமாய் குழைந்தவளே!
#melmaruvathur #guru #bangaruadigalar #amma #adhiparasakthi #omsakthi #ammasongs #devotionalsongs #sirkazhi
Негізгі бет SONG - RETRO | சக்திக்கும் சக்தி இவள் | SAKTHIKKUM SAKTHI IVAL | ADHISWARA RETRO
Пікірлер: 30